மோடியின் அரசால் பொங்கி பெருகிய பொருளாதாரம்!
மோடி அரசின் சாதனைகள் இந்தியாவில் பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்து ஐந்தாவது பொருளாதார நாடாக மாறி உள்ளது.
சமீபத்தில் தென்னாபிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா விரைவில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக மாறும் என்றார். இது நிச்சயமாக வெறும் வாய்ச்சவடால் இல்லை என்று கூறலாம். தற்போது 3.38 ட்ரில்லியன் டாலர் பொருளாதார பலத்துடன் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. 2014ஆம் ஆண்டில் நம் நாடு பத்தாவது இடத்தில் இருந்தது என்கிற போது இது சாதாரண சாதனை இல்லை.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடந்த 10 ஆண்டுகளாக சராசரியாக 6.3 சதவீதமாக உள்ளது . இதே வேகத்தில் சென்றால் வரும் 2027 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஜப்பானில் தாண்டி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். இது நிச்சயம் சாத்தியம் என்கிறார் பாரத ஸ்டேட் வங்கியின் குழும தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் சௌமியா காந்தி கோஷ் . இந்த நிலையை இந்தியா 2029 ஆம் ஆண்டு எட்டும் என்று முன்பு கணிக்கப்பட்டதற்கு மாறாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் நாடு சாதிக்கும் என்று சத்தியம் செய்கிறார் இவர் .
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ள பட்டியல் படி கடந்த 2005 2021 காலகட்டத்தில் இந்தியா சுமார் 41 கோடியை 50 லட்சம் பேரை வறுமையில் இருந்து வெளியேற்றியுள்ளது.இருந்த போதும் தனிநபர் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாம் வங்காளதேசம் போன்ற நாடுகளையும் விட பின்தங்கி உள்ளோம் என்பது போன்ற சங்கடங்கள் இருக்கின்றன. ஆனால் நாடு வளம் அடையும்போது அதன் நன்மைகள் குடிமக்களுக்கும் கசியும் என்று நம்பலாம்.
SOURCE :DAILY THANTHI