மோடி, அமித்ஷா ஆகியோரை மறக்கவே மாட்டேன் - பதவி ஏற்றவுடன் நன்றியுடன் நினைவுகூர்ந்த ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே.

Update: 2022-07-01 07:20 GMT

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சி கீழ் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களின் காரணமாக அரசு கவிழ்ந்தது.



இதனையடுத்து உத்தவ் தாக்ரே தனது பதவியை ராஜினாமா செய்தார், இந்நிலையில் புதிய முதல்வராக அதிருப்தி உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார்.

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் இணைந்து மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரை சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கூறினர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் 120'க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ'க்கள் இருந்தாலும் முதலமைச்சர் வாய்ப்பு எங்களுக்கு தந்த பா.ஜ.க'விற்கு நன்றி இந்த பெருந்தன்மைக்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு நன்றி' என கூறினார்.

பின்ன மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநர் பகத்சிங் கோஷியார் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார். 


Source - News 18 Tamil Nadu

Similar News