இந்திய அரசிடமிருந்து 'பல்பு' வாங்கிய எலான் மஸ்க்!

Update: 2022-02-16 13:29 GMT

"டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை தொடங்கினால் மட்டுமே, அந்நிறுவனத்தின்  கார்களை  இந்திய சந்தையில் அனுமதிக்கப்படும்"  என்று மத்திய அரசு கூறியுள்ளது.


டெஸ்லா நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள முடிவு, அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பின்னடைவாக அமைய உள்ளது. அதாவது,  தனது மின்சார கார்களின் உற்பத்தி தொழிற்சாலையை சீனாவில் நிறுவி, அங்கு உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்யலாம் என்ற ஒரு முடிவை எடுத்துள்ளது.

இம்முடிவு மத்திய அரசை கோபமடையச் செய்துள்ளது.  இந்தியாவில் உற்பத்தி செய்தால் மட்டுமே இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் அனுமதிக்கப்படும் என்று ஒரு முடிவில்  இந்தியா உறுதியாக இருக்கிறது.


சமீபத்தில் நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது " டெஸ்லா நிறுவனத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் சீனாவில் உற்பத்தி செய்து, இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் என்ற போக்கை நாங்கள் முற்றிலும் ஏற்கப் போவதில்லை." என்று கூறினார்.


மேலும் இதுகுறித்து கனரக தொழிற்சாலை துறை அமைச்சர் கிருஷ்ணன் பால் குறுஞ்சு  லோக்சபாவில் இதுகுறித்துக் கூறுகையில் : டெஸ்லா நிறுவனம் சீனாவில் வேலையாட்களை வைத்து கார்களை உற்பத்தி செய்து, இந்தியாவில் விற்பனை செய்யும் போக்கை மோடி அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது, எங்கள் அரசாங்கம் நம் நாட்டில் வேலை வாய்ப்பைப் பெருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும்.

என்று கூறினார்.

TFI Post

Tags:    

Similar News