சம்பளம் தராத செல்போன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்.!

சம்பளம் தராத செல்போன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்.!

Update: 2020-12-12 13:19 GMT

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் விஸ்ட்ரோன் என்ற ஐஃபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. பல மாதங்களாக நிலுவையில் இருந்த ஊதியத்தைத் தராத ஆத்திரத்தில் தொழிற்சாலையின் நாற்காலிகள், கம்பியூட்டர், தொலைக்காட்சிப் பெட்டிகள் என அனைத்தையும் ஊழியர்கள் அடித்து நொறுக்கி விட்டனர்.

மேலும், நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களும் அடித்து நொறுக்கினர். ஒரு அறையில் தீ வைக்கப்பட்டு, உடனடியாக அது பற்றிய தகவல் காவல்துறைக்கு தெரியவந்ததும் உடனடியாக அணைத்து விட்டதாக தகவல் கூறுகின்றன.

மேலும், சம்பளம் வழங்காத நிறுவனத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தால் கோலாரில் பெரும் பரபரப்பு நிலவியது. சம்பளம் வழங்காத நிறுவனத்துக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

Similar News