ரூ.58,000 கோடி மதிப்பீட்டில் 567 திட்டங்கள் - கடற்கரை மாவட்டங்களுக்கான மோடி அரசின் அதிரடி திட்டம் என தெரியுமா?

Update: 2022-07-25 01:50 GMT

துறைமுகங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை குறைப்பதற்கும், பூஜ்ய மற்றும் குறைந்த காற்றை வெளியேற்றவும் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள், அனைத்து பெரிய துறைமுகங்களும் மின்சாரத்தில் முழு தன்னிறைவு பெற்றதாக மாற்றப்படும். துறைமுகங்களின் அனைத்து மின் தேவைகளும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படும்.

இந்த திட்டத்தில் இயற்கை முறையிலான எரிசக்தி ஆற்றல்கள், விளக்குகள், தானியங்கி மற்றும் குறைந்த அளவு சேமிப்பு, சூரியஒளி மேற்கூரைகள், குறைந்த வேகத்தில் சுழலும் மின்விசிறிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவை அடங்கும்.

சாகர்மாலா திட்டம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிவழித்தடங்கள் அமைச்சகத்தின் முதன்மையான திட்டம். இந்தியாவிலுள்ள 7,500 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையையும், 14,500 கிலோமீட்டர் அளவிலான நீர்வழித் தடங்களையும், சர்வதேச கடல்சார் வணிக வழிகளையும் பயன்படுத்துவதன் மூலம் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை இது அதிகரிக்கிறது.

சாகர்மாலாவின்கீழ், 800-க்கும் மேற்பட்ட திட்டங்கள், சுமார் 5.5 லட்சம் கோடி மதிப்பீட்டில், 2015-ம் ஆண்டு முதல் 2035-ம் ஆண்டு வரை அனைத்து கடலோர மற்றும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் செயல்படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

சாகர்மாலா திட்டத்தில், துறைமுகங்கள் மற்றும் முனையங்களை நவீனமயமாக்கல், புதிய துறைமுகங்கள், முனையங்களை உருவாக்குதல், ரோரோ மற்றும் சுற்றுலா தலங்கள், துறைமுக இணைப்புகளை மேம்படுத்துதல், உள்நாட்டு நீர்வழிகள், கலங்கரை விளக்கம், சுற்றுலாதலம், துறைமுகங்களை சுற்றியுள்ள பகுதிகளை தொழில்மயமாக்குதல், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப மையங்கள் ஆகியவை அடங்கும். கடலோர மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சிக்காக, ரூ.58,000 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 567 திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Input From: MaraineSite 


Similar News