கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு: ஆனால் இப்படி நடந்துக்கொள்ளக்கூடாது.. ட்விட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை.!

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு: ஆனால் இப்படி நடந்துக்கொள்ளக்கூடாது.. ட்விட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை.!

Update: 2021-02-11 13:28 GMT

போலியான செய்திகள் மற்றும் வன்முறை தூண்டும் விதமாக பரப்புகின்ற சமூக ஊடகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: பேச்சு சுதந்திரம் இந்த நாட்டில் அனைவருக்கும் உள்ளது. அதற்காக 19 ஏ பிரிவு இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று கூறுகிறது.

நாங்கள் எப்போதும் சமூக ஊடகங்களை மதிக்கிறோம். அனைத்து பொதுமக்களும் அதிகாரம் அளித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

இருந்தாலும், போலி செய்திகள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அது ட்விட்டராக இருந்தாலும் சரி மற்ற ஊடகங்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Similar News