தியோகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறத்ததால் நீண்டநாள் கனவு நிறைவேறியது - ஜார்க்கண்ட் முதலமைச்சர்

Update: 2022-07-12 11:27 GMT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாவது விமான நிலையமான தியோகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் தனது கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பெருமித்துடன் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் விமான நிலையம் உட்பட ரூ.16,800 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் சென்றடைந்தார். அவரை ஜார்க்கண்ட் முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ரமேஷ் பைஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன் பின்னர் விழா நடைபெறும் மேடைக்கு பிரதமர் மோடி சென்றார். இந்த விழாவில் மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பேசியதாவது: கடந்த 2010ம் ஆண்டு காணப்பட்ட தியோகர் விமான நிலையத்தின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார். ரூ.400 கோடியில் கட்டப்பட்ட புதிய விமான நிலையம் எங்களுக்கு மிகப்பெருமை அளிப்பதாக அமைந்துள்ளது என்றார். மேலும், பேசிய அவர் புதிய விமான நிலையம் திறப்பால், நாடு முழுவதில் உள்ள பக்தர்கள் எளிதாக ஆன்மீக தலமான பாபா வைத்தியநாத் தாமிற்கு செல்ல முடியும். எனவே ஆண்டிற்கு 5 லட்சம் பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தி தரும் வகையில் விமானம் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: புதியதலைமுறை

Image Courtesy: ANI

Tags:    

Similar News