இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்களுக்கு உடல் ரீதியான சித்திரவதை - கேரளாவை மிரள வைத்த ExMuslims அமைப்பின் அறிக்கை!

ExMuslims of Kerala vows to protect rights of those who renounce religion

Update: 2022-01-12 11:25 GMT

இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட கேரளாவின் முன்னாள் முஸ்லிம்கள் அமைப்பினர், இஸ்லாம் மதத்தைத் துறந்தவர்களின் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்தனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்ற மதங்களைக் கைவிடுபவர்களுடன் ஒப்பிடமுடியாது என்றும், இஸ்லாத்தை கைவிடுபவர்கள் பல கொடுமைகளை அனுபவிப்பதாக கூறினர்.

ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் கூடிய கேரள முன்னாள் முஸ்லிம்களின் உறுப்பினர்கள், ஜனவரி 9 ஆம் தேதியை கேரள முன்னாள் முஸ்லிம் தினமாக அறிவிக்க முடிவு செய்தனர். "இந்தியாவில் இதுபோன்ற ஒரு அமைப்பு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படுவது நாட்டிலேயே இதுவே முதல் முறை" என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்கள் சமூக ஒதுக்கீட்டை எதிர்கொள்வதைத் தவிர மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளை எதிர்கொள்கின்றனர் என்று ExMuslims அமைப்பினர் கூறினார்.

இதனால்தான் முன்னாள் முஸ்லிம்களுக்கான அமைப்பு அவர்களின் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பால் வாக்குறுதியளிக்கப்பட்ட உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் மத மரபுகள் அல்லது நடைமுறைகளின் பெயரால் செய்யப்படும் அனைத்து அட்டூழியங்களுக்கும் எதிராக நீதிமன்றங்களை நாடவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம், "என்று அந்த அமைப்பினர் வெளியிட்ட  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகுத்தறிவுவாதியும் சுதந்திர சிந்தனையாளருமான ஈ.ஏ.ஜப்பார்க்கும் இஸ்லாமிய தவாப் பிரச்சாரகர் எம்.எம்.அக்பருக்கும் இடையே நடந்த விவாதத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜனவரி 9 ஆம் தேதியை கேரள முன்னாள் முஸ்லிம் தினமாக அமைப்பு முடிவு செய்தது.

மலப்புரத்தில் நடைபெற்ற சுமார் மூன்று மணி நேர விவாதம் நெட்டிசன்கள் மத்தியில் ஹிட் ஆனது. இது யூடியூப்பில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.  இக்கூட்டத்தில் கேரள தலைவர் லியக்கதலி, துணைத் தலைவர் ஜஸ்லா மடசேரி, பொதுச் செயலாளர் சஃபியா பி.எம்., மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆரிப் ஹுசைன் தெருவத், ஷபீக் எம்.கே., மற்றும் முன்னாள் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News