முஸ்லிம் மதத்தை விட்டு விலகியவர்களுக்கு புதிய அமைப்பு? என்ன காரணம் தெரியுமா?
முஸ்லிம் மதத்தைவிட்டு விலகியவர்களுக்கு கேரளாவில் முன்னாள் முஸ்லிம்கள் பிரத்யேக அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கொச்சியில் கடந்த 9ம் தேதி கேரளாவின் முன்னாள் முஸ்லிம்கள் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தை பின்பற்றி அதில் இருந்து விலகியவர்களுக்காக இந்த அமைப்பு பிரத்யேகமாக தொடங்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் லியாகத் அலி கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்த அமைப்பு தொடங்கிய நாளான ஜனவரி 9ம் தேதியை கேரளா முன்னாள் முஸ்லிம்கள் தினமாக கடைப்பிடிக்கப்போவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. நாட்டில் முதன் முறையாக இதுபோன்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது எனவும் தங்களின் அறிவிப்பில் கூறியுள்ளனர்.
முஸ்லிம் மதத்தை பின்பற்றி பல காரணங்களுக்காக அதில் இருந்து வெளியேறியவர்களுக்கு சமூகப் புறகணிப்பை எதிர்கொள்கின்றனர். அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பல சித்ரவதைகளையும் அனுபவிக்கின்றனர். அவர்கள் மிகவும் கண்ணியத்துடன் வாழ்வதற்கு இந்த அமைப்பு உறுதி செய்யும் எனக் கூறினர்.
Source: News 18 Tamilnadu
Image Courtesy:The New Indian Express