டிசம்பரில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2 லட்சம் கோடி, இறக்குமதி ரூ.2.92 லட்சம் கோடி - கொரோனா சவாலை சமாளிக்கும் மத்திய அரசு!

டிசம்பரில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2 லட்சம் கோடி, இறக்குமதி ரூ.2.92 லட்சம் கோடி - கொரோனா சவாலை சமாளிக்கும் மத்திய அரசு!

Update: 2021-01-03 07:33 GMT

கடந்த மாதம் நாட்டின் ஏற்றுமதி சுமார் 2 லட்சம் கோடியாகவும், இறக்குமதி சுமார் 2 லட்சத்து 92 ஆயிரம் கோடியாகவும் இருந்தது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சகம் சனிக்கிழமையன்று வெளியிட்ட முதற்கட்ட தகவல்கள், டிசம்பரில், வர்த்தக பற்றாக்குறை 25.78% அதிகரித்து 15.71 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

2019 டிசம்பரில் 27.11 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது, 2020 டிசம்பரில் நாட்டின் வர்த்தகம் 26.89 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளதால், இந்தியாவின் ஏற்றுமதி .8% குறைந்துள்ளதாகவும் தரவு வெளிப்படுத்தியுள்ளது. பெட்ரோலியம், தோல் மற்றும் கடல் பொருட்கள் போன்ற துறைகளில் சுணக்கம் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.

2019 டிசம்பரில் ஏற்றுமதி 27.11 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 39.5 பில்லியன் டாலராகவும் இருந்தது. நவம்பர் 2020 இல், ஏற்றுமதி 8.74% குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், நாட்டின் வர்த்தக ஏற்றுமதி 15.8% குறைந்து 200.55 பில்லியன் டாலர்களாக சுருங்கியது, இது 2019-20 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 238.27 பில்லியன் டாலர்களாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில் இறக்குமதி 29.08% குறைந்து 258.29 பில்லியன் டாலராக இருந்தது. இது 2019-20 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் 364.18 பில்லியன் டாலராக இருந்தது.

"2020 டிசம்பரில் இந்தியா நிகர இறக்குமதியாளராக உள்ளது, வர்த்தக பற்றாக்குறை 15.71 பில்லியன் டாலராக உள்ளது, இது 12.49 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையுடன் ஒப்பிடும்போது 25.78% அதிகரித்துள்ளது" என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2020 டிசம்பரில் எண்ணெய் இறக்குமதி 10.37 சதவீதம் குறைந்து 9.61 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்த நிதியாண்டில் ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் இறக்குமதி 44.46 சதவீதம் குறைந்து 53.71 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

தங்க இறக்குமதி சுமார் 2 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டைவிட 82% உயர்ந்துள்ளது. மருந்துகள் மற்றும் மருந்து தயாரிப்புகளின் ஏற்றுமதி இந்தியாவின் ஏற்றுமதியில் அதிக அளவில் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 17% அதிகம்.

Similar News