போலியான தடுப்பூசிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

போலியான கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வரும் நிலையில், உண்மையான தடுப்பூசிகளை அடையாளம் கண்டுப்பிடிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு விளக்கம் கொடுத்து மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.;

Update: 2021-09-06 09:26 GMT

போலியான கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வரும் நிலையில், உண்மையான தடுப்பூசிகளை அடையாளம் கண்டுப்பிடிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு விளக்கம் கொடுத்து மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக மூன்று வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 'சீரம்' நிறுவனத்தை சேர்ந்த கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் ரஷ்யாவில் உருவான 'ஸ்புட்னிக் வி' ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கோவாக்சின் உட்பட சில தடுப்பூசிகள் போலியாக தயாரிக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வினியோகம் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

எனவே உண்மையான தடுப்பூசிகளை எப்படி அடையாளம் காண்பது பற்றி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் தடுப்பூசிகளின் மேல் உள்ள லேபிள் எந்த நிறத்தில் இருக்கும், அதில் நிறுவனங்களின் எப்படி இருக்கும் உள்ளிட்டவைகள் விளக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2838344

Tags:    

Similar News