விவசாய சட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் விவசாயிகள் - வைரலாகும் வீடியோ.!

விவசாய சட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் விவசாயிகள் - வைரலாகும் வீடியோ.!

Update: 2020-12-20 18:12 GMT

தற்போது புதிதாகத் திருத்தப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களுக்கு எதிராகப் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகளை அதனைத் திருப்பி பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் வேளையில், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அந்த விவசாய சட்டங்களுக்கு தங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளித்து வருகின்றனர். 

இது குறித்து வெளியாகிய வீடியோ ஒன்றில், உத்தரப் பிரதேசம் நொய்டா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், "தற்போது பிரதமர் அறிமுகம் படுத்தியுள்ள மூன்று விவசாய சட்டங்களும் விவசாயிகளுக்குப் பயனளிப்பவை," என்று கூறியதோடு தற்போது இந்த சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் இரண்டு ஆண்டுகள் தங்கள் போராட்டங்களைத் தொடர்வோம் என்று கூறியதற்கு, இவர் "இந்த சட்டங்களுக்கு ஆதரவு அளித்து ஐந்து ஆண்டுகள் போராட்டம் நடத்துவோம்," என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு விவசாயி, "நாங்கள் இந்த சட்டங்களுக்கு எங்கள் முழு ஆதரவைத் தருகிறோம். CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டு ஆண்டுகள் போராட்டத்தைத் தொடர்ந்தால், நாங்கள் ஐந்து ஆண்டுகள் உட்கார தயாராக உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார். 

"தற்போது வரை எந்த அரசாங்கமது விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கி வருகின்றதா, இந்த அரசாங்கம் தருகின்றது. ஆனால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இதற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

அவர்கள் விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள் என்று எண்ணட்டும்," என்று மற்றொரு விவசாயி கூறினார். "மோடி அரசாங்கம் எங்களுக்கு நல்லது செய்து வருகின்றது. இந்த மூன்று சட்டங்களும் எங்களுக்குப் பயனுள்ளதே. மேலும் தற்போது நடந்து வரும் ஆர்ப்பாட்டம் ஆட்சியை முறியடிப்பதற்கே அவ்வாறு ஒருபோதும் நடக்காது," என்றும் வலியுறுத்தினார். 

முன்னர் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பிரதமரைச் சந்தித்து நன்றி தெரிவித்து மற்றும் விவசாய சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டாமென்று கோரிக்கை வைத்தனர். இந்த விவசாயிகள் பிற ,மாநிலங்கள் மற்றும் பஞ்சாப் உட்பட, இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவியாகவே உள்ளது என்று வலியுறுத்தினர். 

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கமல் படேல் என்ற விவசாயி, "புதிதாக அமல்படுத்திய விவசாய மசோதாக்கள் விவசாயிகளுக்கு லாபத்தையே அளித்துள்ளது. எங்கள் உற்பத்திகளுக்கு அதிக விலையைப் பெறுகின்றோம். மேலும் ஒரு குவிண்டாலுக்கு 200 முதல் 300 ரூபாய் பெறுகின்றோம். நாங்கள் நேரடியாக மண்டிகளுக்கு மற்றும் வெளியிடத்தில் விற்க முடிகின்றது," என்று தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த விவசாயி நிகில் பிரமானிக், "எங்கள் உற்பத்திகள் அதிகமுள்ளபோதும். அதற்கான நியாவிலையை நாங்கள் பெறவில்லை. தற்போது அறிமுகப்படுத்திய புதிய சட்டங்கள் மூலம் எங்கள் உற்பத்திகளுக்கு 15 சதவீதம் அதிகம் பெறுகின்றோம். மேலும் நேரடியாகப் பணத்தையும் மற்றும் உரங்களையும் பெறுகின்றோம். இதற்காக அரசாங்கத்திற்கு நன்றி செலுத்துகின்றோம்," என்று அவர் கூறினார். 

Similar News