அசுர வளர்ச்சி கண்ட இந்தியா! கொரோனா காலத்திலும் ஜெட் வேகத்தில் உயர்ந்த FDI!

அசுர வளர்ச்சி கண்ட இந்தியா! கொரோனா காலத்திலும் ஜெட் வேகத்தில் உயர்ந்த FDI!

Update: 2021-01-29 17:19 GMT
இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 2020 நவம்பரில், கொரோனா காலத்திலும் இமாலய வளர்ச்சி கண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்நிய நேரடி முதலீடு 2020 நவம்பர் மாதத்தில் 81 சதவீதம் அதிகரித்து 10.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த 2019 நவம்பரில் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் இந்தியா மொத்த அந்நிய நேரடி முதலீடாக 58.37 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈர்த்துள்ளது. இது ஒரு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்தது மற்றும் 2019-20 முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடும்போது 22 சதவீதம் அதிகமாகும்.


இதே போல் நிதியாண்டு 2020-21 (ஏப்ரல் முதல் நவம்பர் 2020 வரை) பங்குச் சந்தைகளில் அமெரிக்க டாலர் 43.85 பில்லியன் அளவுக்கு அந்நிய முதலீடு வந்துள்ளது. இதுவும் ஒரு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களுக்கு மிக உயர்ந்தது மற்றும் 2019-20 முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடும்போது 37% அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்னிய நேரடி முதலீடு பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்கி மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடன் அல்லாத நிதியத்தின் முக்கிய ஆதாரமாகும். இது ஒரு பயனுள்ள மற்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை அமல்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனக் கூறப்படுகிறது.

அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை அதிக முதலீட்டாளர்களுக்கு சாதகமாக மாற்றுவதும், நாட்டிற்குள் முதலீட்டு வரத்துக்குத் தடையாக இருக்கும் கொள்கை தடைகளை நீக்கும் பணியில் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளித்துள்ளன. இது நாட்டுக்கு தொடர்ந்து பெறப்படும் அன்னிய நேரடி முதலீடுகளின் அளவிலிருந்து தெளிவாகிறது. அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை சீர்திருத்தங்கள், முதலீட்டு வசதி மற்றும் வணிகத்தை எளிதாக்குவது குறித்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் நாட்டிற்கு அந்நிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்தியுள்ளன.

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்த அதிகரிப்பு, உலகளாவிய முதலீட்டாளர்களிடையே விருப்பமான முதலீட்டு இடமாக இந்தியாவின் நிலையை அங்கீகரிப்பதாகும். 

Similar News