திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி.!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி.!

Update: 2021-01-31 12:00 GMT

கொரோனா தொற்று காரணமாக 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட்டு வந்த நிலையில், நாளை முதல் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனிடையே கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் 50 சதவீத இருக்கைளுடன் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மின்சார கட்டணம் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் அவதியுற்று வந்தனர் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், திரையரங்குகளில் நாளை முதல் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முககவசம் அணிந்து கொண்டுதான் திரையரங்கில் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Similar News