மாநிலங்களுக்கு 12 கோடி தடுப்பூசி விரைவில் வழங்கப்படும்.. மத்திய அரசு தகவல்.!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து நிறுத்துவதற்கு மாநிலங்களுக்கு ஜூன் மாதம் 12 கோடி தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-05-31 05:53 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து நிறுத்துவதற்கு மாநிலங்களுக்கு ஜூன் மாதம் 12 கோடி தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதில் தடுப்பூசிகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் திட்டம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சில மாநிலங்களில் தடுப்பூசி போடுவதற்கு பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டது.




 


மே மாதங்களில் தடுப்பூசி திட்டத்துக்கு 7.94 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஜூன் மாதங்களை பொறுத்தமட்டில் 12 கோடி தடுப்பூசிகள் மாநிங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தடுப்பூசிகளை வீணாகுவதை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News