மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்.!
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் தற்போது ஒரு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் தற்போது ஒரு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பாதிப்பு ஒரு வழியாக கட்டுப்பாட்டிற்கு வந்தது. அதில் மகாராஷ்டிரா, கேரளா, அசாம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே மத்திய அமைச்சரவைக் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 86.7 சதவீதம் பேர் 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 24 மணி நேரங்களில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சரவைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் அம்மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்பாடுகளை தீவிரபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.