வரக்கூடிய பண்டிகை காலங்களை குறிவைக்கும் பயங்கரவாதிகள் ! எச்சரிக்கை விடுக்கும் உளவுத்துறை !

பயங்கரவாதத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது

Update: 2021-09-24 08:01 GMT

பொதுவாக பயங்கரவாதிகள் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க பண்டிகை காலங்களை தான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த அமைதியை சீர்குலைக்க பல்வேறு யுக்திகளை பயங்கரவாதிகள் மேற்கொள்வர் அதை கடந்த காலங்களில் நம் உளவுத்துறை அவர்களின்  யுக்திகளை  கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும். பின்பு அந்த யுக்திகளை  இந்தியா முறியடிக்கும்.

அந்த வகையில் தற்பொழுது எதிர் வரக்கூடிய பண்டிகை காலத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

சமீப காலங்களில் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்திய அதிரடி சோதனையின் போது பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு, ஜான் முகமது ஷேக், ஒசாமா, மூல்சந்த், ஷிஷிவன்  கோமர், முகம்மது அபூபக்கர், முகமது அமீர் ஜாவேத். இவர்களுள் ஒசாமா மற்றும் குவாமர் ஆகியோர் பாகிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ இடம் பயிற்சி பெற்றுள்ளனர் வெடி பொருட்களை கையாளுவதற்கும் 7 AK-47உள்ளிட்ட துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

அடுத்து வரக்கூடிய நாட்களான நவராத்திரி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் பண்டிகை நாட்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நம் நாட்டின் அமைதியை சீர்குலைக்க விரும்புவர் கடந்த காலங்களிலும் இது போன்ற எச்சரிக்கைகளும் அந்த எச்சரிக்கைகளை பயன்படுத்தி இந்தியா பல பயங்கரவாதிகள் யுகத்திகளை முறியடித்து நாட்டின் அமைதியை நிலை நாட்டியுள்ளது. அதே போன்று இந்த எச்சரிக்கையையும்  பயன்படுத்தி நாட்டில் அமைதியை மத்திய அரசு  நிலையில் நாட்டும்.

Dinamalar

Tags:    

Similar News