அமைச்சரை தேச துரோகி என்று அழைத்த பாதிரியார் - வரம்பை மீறும் விழிஞ்ஞம் போராட்டம்!

விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிராக நடைபெற்ற விவகாரத்தில் அமைச்சரை தேச துரோகி என்று குறிப்பிட்ட பாதிரியார்.

Update: 2022-12-04 03:14 GMT

விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில் மீனவ சங்கம் இந்தப் போராட்டத்தில் பெருமளவில் ஈடுபட்டு வருகிறது. மேலும் மீனவர் சங்கத்திற்கு ஆதரவாக திருவனந்தபுரம் மாவட்டம் லத்தீன் கத்தோலிக்க சபை ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இது சபையில் சார்ந்த ஏராளமான பாதிரியார்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் தற்பொழுது தேச விருது செயல் என்று கேரளா துறைமுக பொறுப்பு துணை அமைச்சர் ரகுமான் கூறியிருக்கிறார்.


இதற்கு பதிலடி கொடுக்க இலத்தீன் கத்தோலிக்க சபை பாதிரியார் அமைச்சர் அப்துல் ரகுமான் தான் தேச துரோகி என்றும், அவரது பெயரிலேயே அது இருக்கிறது என்றும் கூறுகிறார். அத்தனை பத்திரிக்கைகளுக்கு முன்பு ஒரு அமைச்சரை தேச துரோகி என்று குறிப்பிட்ட அவருடைய பெயரையும் கலங்கப்படுத்தும் விதமாக பாதிரியார் பேசியிருக்கிறார்.


பாதிரியாரின் இந்த கருத்தினால் கேரளாவில் கடும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. இன்றையில் இது தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் விழிஞ்ஞம் போலீஸ்ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் இந்த புகாரை தற்பொழுது விசாரித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து பாதிரியார் மீது மத உணர்வுகளை புண்படுத்துவதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற வருகின்றது.

Input & Image courtesy: Dinakaran News

Tags:    

Similar News