நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

Update: 2021-02-01 11:14 GMT

மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்று நாடாளுமன்றத்தில் 3வது பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

2021 22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி அரசின் 8வது பட்ஜெட் ஆகும்.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதன் முறையாக காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்கு இடையில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராமல் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.
 

Similar News