கல்வி ஒளிபரப்பிற்கு 200 சேனல்கள்: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022, 23ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

Update: 2022-02-01 06:47 GMT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022, 23ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இந்த பட்ஜெட் உரை குறித்து உரையாற்றி வருவதாவது: இந்தியாவில் ஏழை, எளிய குழந்தைகள் படிப்பை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் 200 கல்வி சேனல்கள் துவக்கப்படும். அதன் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை வீட்டில் இருக்கும்போது கற்றுக்கொள்ள முடியும். இத்திட்டம் மிக விரைவில் துவங்கப்படும் என கூறியுள்ளார்.

இது போன்ற திட்டங்களால் ஆசிரியர்களின் வேலை நேரம் குறையலாம். அவர்களின் பணி சுமையும் குறையும். மாணவர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு கல்வி சேனல்களை பார்த்து தெரிந்து கொள்ள இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News