நியாயவிலைக் கடையில் மோடி படம் வைக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியது ஏன்?

நியாயவிலைக் கடைகளில் பிரதமர் மோடி பதாகைகளை வைக்க வேண்டும் என்று மத்தியில் நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். ஏன் தெரியுமா?

Update: 2022-09-04 02:56 GMT

தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள சஹீராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அங்குள்ள நியாயவிலை கடைகளில் சோதனை நடத்தினார். அப்போது கம்மா ரெட்டி பகுதியில் உள்ள உள்ள நியாய விலை கடையில் நிர்மலா சீதாராமன் அவர்கள் எதிர்பாராத விதமாக சோதனை ஒன்றே மேற்கொண்டார். அப்பொழுது உடன் இருந்த மாவட்ட ஆட்சியாளரிடம் அரசு வழங்கும் அரிசிக்கு மத்திய அரசு எவ்வளவு மானியம் வழங்குகிறது தெரியுமா? என்று கேட்டார். அதற்கு ஆட்சியாளர் பதில் தெரியாமல் நின்றார். பிறகு 30 நிமிடங்கள் நேர அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு, பதில் கூறுங்கள் என்று கூறி ஆய்வுகளை தொடர்ந்தார்.


பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்தியில் நிதி அமைச்சர் அவர்கள் மாநில அரசும் மத்திய அரசு எவ்வளவு சலுகைகளை மக்களுக்கு தருகின்றது? என்பதை எடுத்துக் கூறினார். குறிப்பாக நியாய விலை கடையில் வழங்கும் ஒரு கிலோ அரிசிக்கு 30 ரூபாய்க்கு மத்திய அரசும், நான்கு ரூபாய் மாநில அரசும் மானியமாக வழங்குகிறது என்று அவர் கூறினார். அதிகபட்ச தொகையை மத்திய அரசுதான் வழங்குகிறது. பிரதமர் பதாகைகள் நியாயவிலைக் கடையில் வைக்க வேண்டும் என்றும், அதனை ஆட்சியாளர் அவர் சரி பார்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.


இதன் காரணமாக தான் நியாயவிலை கடைகளில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய பதாகைகள் வைக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியிருக்கிறார். தெலுங்கானா மாநிலத்திற்கு செல்லும் வழியில் நிர்மலா சீதாராமன் அவர்கள் சென்று வாகனத்தின் முன்பு, சில காங்கிரஸ் தொண்டர்கள் மறியல் கலவரங்களில் ஈடுபட்டார்கள். அதனை மீறியும் மக்களுக்கு இந்த அறிவுரையை வழங்கியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் அவர்கள்.

Input & Image courtesy: Nakkheeran News

Tags:    

Similar News