யோகேந்திர யாதவ் உள்ளிட்ட விவசாய தலைவர்கள் மீது கொலை முயற்சியின் கீழ் FIR பதிவு!

யோகேந்திர யாதவ் உள்ளிட்ட விவசாய தலைவர்கள் மீது கொலை முயற்சியின் கீழ் FIR பதிவு!

Update: 2021-01-28 18:00 GMT

நேற்று முன்தினம் குடியரசு தினத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய வன்முறை தொடர்பாக இதுவரை காவல்துறை 22 FIR பதிவு செய்துள்ளது. வன்முறை, பொதுச் சொத்துக்களைச் சேதம் செய்தது, காவல்துறையைத் தாக்கியது தொடர்பாக 200 ஆற்டபட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில உண்மைகளை உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

 
மேலும் அந்த FIR யில் யோகேந்திர யாதவ் உட்பட 9 விவசாய தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் போன் கேமரா, CCTV கேமரா மற்றும் ட்ரான் கேமேராக்களை சரிபார்த்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, தர்ஷன் பால், ராஜிந்தர் சிங், பால்பிர் சிங் ராஜேவால், பூட்ட சிங் பூர்ஜ்கில் மற்றும் ஜோகின்ற சிங் உகரஹா உள்ளிட்ட விவசாய தலைவர்களின் பெயர்கள் அந்த FIR யில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுதவிர BKU வின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைட் அவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும் இவர்களுக்கு இந்தியத் தண்டனை சட்டம் கொலை முயற்சி சட்டம் 307 கீழ், வன்முறை முயற்சி சட்டம் 147 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவு செய்யப்பட்ட FIR கொள்ளை மற்றும் பொதுச் சொத்தை சேதம் செய்தல் உள்ளிட்டவைகாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் கலவரக்காரர்கள் காவல்துறையிடம் இருந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிடுங்கியதால் கொள்ளை குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மேலும் செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கைக் குற்றப்பிரிவு விசாரிக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் டிராக்டர் பேரணி அமைதியாக நடக்கும் மற்றும் எந்தவித வன்முறையும் ஏற்படாது என்ற ஒப்பந்தத்தில் டெல்லி காவல்துறையுடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கையெழுத்திட்ட விவசாய தலைவர்களின் பெயர்களும் இதில் குறிப்பிடப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 

Similar News