கிறிஸ்துமஸ்க்கு பட்டாசு வெடிக்கலாம்.. ஆனால் தீபாவளிக்கு ‘நோ’.. ஒரு தலைபட்சமாக நடக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம்.!

கிறிஸ்துமஸ்க்கு பட்டாசு வெடிக்கலாம்.. ஆனால் தீபாவளிக்கு ‘நோ’.. ஒரு தலைபட்சமாக நடக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம்.!

Update: 2020-12-02 19:32 GMT

கடந்த மாதம் நடந்து முடிந்த இந்துக்கள் பண்டிகையான தீபாளவிக்கு பட்டாசு வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாட்டை தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டிருந்தது. இதனை அனைத்து மாநிலங்களும் கடை பிடிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.


காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் பட்டாசு வெடிக்கவே கூடாது என்று உத்தரவை பிறப்பித்தனர். இதனால் பல கோடி ரூபாய் அளவிலான பட்டாசுகள் விற்பனை ஆகாமலே இருந்தது. இதனால் இந்த வருடத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.


இந்நிலையில், வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.


அது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பின்படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது நள்ளிரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது மட்டும் எப்படி இரவு நேரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்கலாம். அப்போது மாசு ஏற்படாதா என்று இந்துக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அனைவருக்கும் ஒரு தலை பட்சமாக நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

Similar News