6 மாநிலங்களில் அனைவருக்கும் முதல் டோஸ்! மத்திய அரசின் அபார சாதனை!
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை இடைவிடாமல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை இடைவிடாமல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஸ் பூஷண் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இமாசல பிரதேசம், சிக்கிம், லட்சத்தீவு, சண்டிகார், கோவா மற்றும் லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: dailythanthi