முதலில் லவ் ஜிகாத் சட்டம், அடுத்து மதராஸா சீர்திருத்தம் - களம் இறங்கும் கர்நாடகா!

முதலில் லவ் ஜிகாத் சட்டம், அடுத்து மதராஸா சீர்திருத்தம் - களம் இறங்கும் கர்நாடகா!

Update: 2021-01-07 09:42 GMT

நாட்டில் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றான 'லவ் ஜிகாத்' எனப்படும் கட்டாய மதமாற்ற வழக்குகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனை எதிர்த்தும் மற்றும் குறைப்பதற்கும்  மாநிலங்களில் பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

கர்நாடகாவில் சிறிய காலகட்டத்திற்கு உள்ளேயே விரைவில் 'லவ் ஜிகாத் சட்டம்' அமல்படுத்தப்படும் என்று கர்நாடக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்ரீமத் பாலாசாகேப் பாட்டில் புதன்கிழமை அன்று தெரிவித்தார். 

மேலும் லவ் ஜிகாத் குற்றங்களுக்கு எதிராகச் சட்டங்களைக் கொண்டுவருவதில் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க வுக்கு எந்த குழப்பமும் இல்லை என்றும் பாட்டில் தெரிவித்தார். "இது பல்வேறு முக்கிய பிரச்சனைகள் கொண்ட சட்டமாகும். அதனால் பல்வேறு துறையில் உள்ள நிபுணர்களிடம் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. தற்போது இது குறித்து சட்டத் துறையில் உள்ள நிபுணர்களிடம்  கலந்துரையாடப்பட்டு வருகின்றது," என்று அவர் குறிப்பிட்டார். 

மதர்ஸா கல்விசார்  பாடத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தவும் மாநில அரசு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. "மதர்ஸாகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். இந்த பள்ளிகளில் இருந்து வருபவர்கள் நேரடியா ITI படிப்புகளில் சேருவதால் மாற்றம் முக்கியம்," என்று அவர் கூறினார். 

மேலும் சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றச் சட்டத்திற்கு எதிராக புதிய சட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன் கீழ் அந்த குற்றம் செய்பவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் மற்றும் 50,000 வரை அபராதமும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் லவ் ஜிகாத் வழக்குகளைக் கவனிக்க 'மத்தியப் பிரதேச மதசுதந்திர சட்டம்-2020' க்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்ததது.  

மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு,  காதல் மற்றும் திருமணம் என்ற பெயரில் கட்டாய மதமாற்றங்களை முடிவு கொண்டுவரும் வகையில் மாநில அரசாங்கம் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் B S எடியூரப்பா அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார். முதல்வரின் அறிக்கைக்குப் பிறகு, லவ் ஜிகாத் சட்டம் கொண்டுவருவதற்கான முன்னேற்றங்கள் நடைபெற்று வருகின்றது. மேலும் கர்நாடகாவில் லவ் ஜிஹாதுக்கு எதிராகக் கடுமையான நேரடி சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று மாநில பா.ஜ.க தலைவர் நலின் குமார் கட்டில் தொடர்ந்து ட்விட் செய்து வருகிறார். 

Similar News