முதலில் ஆட்சி, இப்பொழுது கட்சி - உத்தவ் தாக்ரேவிடமிருந்து பறிபோகும் சிவசேனா கட்சி

எது உண்மையான சிவசேனா என ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தவ் தாக்ரேய், ஏக்நாத் ஷிண்டே அணிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிராவில்.

Update: 2022-07-23 09:06 GMT

எது உண்மையான சிவசேனா என ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தவ் தாக்ரேய், ஏக்நாத் ஷிண்டே அணிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிராவில்.

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த மாதம் வீசிய அரசியல் புயல் இப்பொழுதுதான் அடங்கி இருக்கிறது. சிவசேனா இரண்டாக உடைந்து விட்டது சிவசேன அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ.க அரசு பதவி ஏற்ற தற்பொழுது ஆட்சியில் இருக்கிறது, துணை முதல்வராக தேவேந்திர பட்டாவிஸ் பதவியேற்று உள்ளார்.

இந்த சூழலில் அடுத்தபடியாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளை துவக்கி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்து தங்களுக்கு கட்சியின் 'வில் அன்பு' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரி தேர்தல் கமிஷனில் ஏக்நாத் சென்று அணி சார்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு மொத்தம் உள்ள 55 எம்எல்ஏக்களின் 40 பேரும் மக்களவில் மொத்தம் உள்ள 18 பேர்கள் 12 பேர் ஆதரவாக இருப்பதால் தேர்தல் கமிஷன் சட்டப்பிரிவு 15'வில் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்ரே ஆகிய இரு அணிகளும் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் முறைப்படி இருவருக்கும் கடிதம் எழுதி இருக்கிறது. இக்கடிதத்திற்கு வரும் எட்டாம் தேதி பிற்பகல் ஒரு மணிக்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


தேர்தல் கமிஷன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 'இரு அணியினரும் கொடுத்துள்ள கடிதங்களை வைத்து பார்க்கையில் சிவசேனா இரண்டாக உடைந்தது தெரிகிறது, எனவே இரு தரப்பினரும் எழுத்து மூலமாக தங்கள் தரப்பில் இருக்கும் ஆதாரங்களை விளக்கங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்' என தேர்தல் கமிஷன் கேடு விதித்தது குறிப்பிடத்தக்கது.


Source - Junior Vikatan

Similar News