கொரோனா பாதிப்பையும் தாண்டி, நேர்மறை முன்னேற்றத்தில் இந்திய பொருளாதாரம் - வெளியான ஃபிட்ச் மதிப்பீடு.!

கொரோனா பாதிப்பையும் தாண்டி, நேர்மறை முன்னேற்றத்தில் இந்திய பொருளாதாரம் - வெளியான ஃபிட்ச் மதிப்பீடு.!

Update: 2020-12-09 08:21 GMT

ஃபிட்ச் மதிப்பீடுகள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணிப்பை 2021 மார்ச் வரையிலான நடப்பு நிதியாண்டில் -9.4 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளன. இது இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் முன்னேற்றத்தை ஏற்படுத்திய பின்னர், முன்னர் கணிக்கப்பட்ட 10.5 சதவீத சுருக்கத்திலிருந்து மேம்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மந்தநிலை கடுமையான பொருளாதார வடுக்களை ஏற்படுத்தியுள்ளது என்றும், நாடு தற்போதைய நிலைகளை சரிசெய்து நீண்டகால திட்டமிடல் குறித்து எச்சரிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஃபிட்ச் மதிப்பீடுகள் அதன் உலகளாவிய பொருளாதார அவுட்லுக்கில் தெரிவித்துள்ளது.

"மார்ச் 2021  1.1 சதவிகித புள்ளி அதிகரிப்புடன் உடன் முடிவடையும் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4 சதவிகிதம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதைத் தொடர்ந்து +11 சதவீத வளர்ச்சி (மாறாமல்) மற்றும் +6.3 சதவீத வளர்ச்சி அடுத்த ஆண்டுகளில் ஏற்படும் என மதிப்பிட்டுள்ளோம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

மக்களின் தொடர்ச்சியான சமூக விலகலுக்கு மத்தியில் சேவைத் துறை மீண்டும் முன்னேற்றம் ஏற்பட்டது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் படிப்படியாக மட்டுமே குறைக்கப்பட்டன. "2021 ஆம் ஆண்டில் பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை வெளியிடுவதால், பொருளாதாரம் மீண்டு வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 500 மில்லியன் டோஸ் உட்பட 1.6 பில்லியன் டோஸ்களை இந்தியா முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளது. இனி சமூக-விலகல்  கட்டுப்பாடுகளை தளர்த்துவதை எதிர்பார்க்கலாம்.

எவ்வாறாயினும், அடுத்த 12 மாதங்களில் தடுப்பூசி பெரும்பான்மையான மக்களை எட்டாது என்று தெரிகிறது. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் மிகப்பெரிய தவிநியோக சவால்கள் இருக்கும் என ஃபிட்ச் மதிப்பீடு தெரிவிக்கிறது.

Similar News