பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்ததில் ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொலை.!

பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்ததில் ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொலை.!

Update: 2020-12-11 13:40 GMT

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து நடத்திவரும் அத்துமீறல்களுக்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது. நேற்று பாகிஸ்தான் ஜம்மு&காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கோடு கட்டுப்பாடு பகுதியில் உள்ள குடிமக்கள் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா இராணுவம் பதிலடி கொடுத்தலில் ஐந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். 

வியாழக்கிழமை அன்று பாகிஸ்தான் இராணுவம் பூஞ்ச் மாவட்டத்தில் மன்கோட் துறையில் குடிமக்கள் குடியிருப்புகளைக் குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. குடிமக்கள் வசதி இருப்புகளைப் பாகிஸ்தான் இராணுவம் குறிவைத்துத் தாக்கியதில் குடிமக்களின் சொத்துக்கள் சேதமடைந்தது. 

"தாக்குதலுக்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்டதில் ஐந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் அவர்களின் பதுங்குழிகளும் அளிக்கப்பட்டுள்ளன," என்று அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பினருக்கும் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 

1999 இல் இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டதில் இருந்து பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஜம்மு &காஷ்மீர் எல்லை கட்டுப்பாடு பகுதியில் நடத்திய தாக்குதலில், 30 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களின் அத்துமீறி நடத்தும் தாக்குதலால் எல்லைப் பகுதி கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை ஆபத்தான நிலையிலே உள்ளது. 

Similar News