ஃப்ளிப்கார்ட், ஸ்விகி நிறுவனங்கள் பல கோடி வரிஏய்ப்பு.. வருமானவரித்துறை அதிரடி சோதனை.!

ஃப்ளிப்கார்ட், ஸ்விகி நிறுவனங்கள் பல கோடி வரிஏய்ப்பு.. வருமானவரித்துறை அதிரடி சோதனை.!

Update: 2021-01-09 10:47 GMT

ஆன்லைன் உணவு டெலிவரியில் முன்னணியில் உள்ள ஸ்விகி நிறுவனம் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்நிறுவனத்தில் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டது ப்ளிப்கார்ட் நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் பல லட்சம் பேர் தினமும் பொருட்களை முன்பதிவு செய்து பொருட்கள் வாங்குவார்கள். பல கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறும். இதில் அரசுக்கு உரிய டேக்ஸ் கட்டாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஸ்விக்கி நிறுவனமும் பல கோடி ரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த இரண்டு நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக இரண்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News