உக்ரைன் போரால் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடி: RBI கவர்னர் கூறியது என்ன?

போர் காரணமாக உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடி உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக RBI கவர்னர் கூறினார்.

Update: 2022-11-21 02:06 GMT

ரிசர்வ் வங்கியின் பொருளாதார மற்றும் கொள்கை ஆய்வு துறை வருடாந்திர மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது ரிசர்வ் வங்கி கவர்னர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாடுகளில்,மிகவும் ஆபத்தான இரண்டாவது அலை போது இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் மூன்றாவது அலை காரணமாக பொருளாதாரம் இன்னும் அழுத்தம் பற்றிய தகவல்களை சேகரிப்பது இன்னும் முக்கியமாக இருந்தது. கொரோனா மூன்றாம் அலை இருந்த பொழுதும் ஏற்கனவே சரிவடைந்த பொருளாதாரம் இயல்பு நிலமைக்கு திரும்பும் நிலையில் உக்ரைன் போர் புதிய சவாலாக கொண்டு வந்தது.


ஒரு கடினமான உணவு மற்றும் எதிர்சக்தி நெருக்கடி உலகம் முழுவதும் திடீரென்று ஏற்படுத்தியது. வேகமாக வாரி வரும் சூழ்நிலை காரணமாக உலக பொருளாதாரத்தில் பெரும் நிலவு பாதிப்பை ஏற்படுத்தும் விலைவாசிகளின் உயர்வு, விநியோக சங்கிலிகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக பணவீக்கம் உலகம் எங்கிலும் ஏற்பட்டது.


வர்த்தக கொள்கை நடவடிக்கைகளிலும் மற்றும் நிதி நடவடிக்கைகளிலும் முடக்கம் வரி குறைப்பு மற்றும் ஏழைகளுக்கு மானியம் போன்றவற்றை உலக நாடுகள் நாடியதால் இந்தியா இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் கவனம் செலுத்த ஆராய்ச்சி தேவைப்பட்டது. இந்த மூன்று பின் விளைவுகள் காரணமாக தொடர்ந்து விழிப்புணர்வு இருக்க வேண்டும். எனவே ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி செயல்பாடு கடந்த காலத்தில் இருந்தது போல இந்த சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News