3வது நாளாக வீட்டிற்கும், அமலாக்கத்துறைக்கும் அலையும் சோனியா காந்தி

புது தில்லியில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விலைக்கு வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக மூன்றாவது நாளாக இன்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடைபெறுகிறது.

Update: 2022-07-27 09:04 GMT

புது தில்லியில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விலைக்கு வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக மூன்றாவது நாளாக இன்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடைபெறுகிறது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் நடந்த பணமோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்தாண்டு இறுதியில் வழக்கு பதிவு செய்தது. அதில் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது சோனியாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா ஆஜர் ஆனார் அவருடன் மகள் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் துணைக்கு சென்றனர்.

நேற்று காலை 11 மணிக்கு வந்த சோனியாவிடம் வருகைப்பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் நடந்த பின்னர் 11 30 துவங்கி இரண்டு மணி வரை மீண்டும் உணவு இடைவேளைக்கு பின் மூன்று மணிக்கு துவங்கிய விசாரணை மாலை ஆறு மணி வர மொத்த ஆறு மணி நேரம் நடைபெற்றது.

நேற்றைய விசாரணையின் போது சோனியாவிடம் 28 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், மேலும் இன்றும் விசாரணை நடைபெறுகிறது எனவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - Dinamalar



Similar News