மத்திய அரசு இலவச உணவு தானிய திட்டம் - ஓராண்டு நீடிப்பு இன்று முதல் அமல்!

மத்திய அரசினால் இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீடிப்பு என்பது இன்று முதல் அமலாகிறது.

Update: 2023-01-02 12:30 GMT

கரோனா காலத்தின் போது ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஏழை எளிய மக்கள் தங்களுடைய உணவிற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த 2020 ஏப்ரல் மாதம் கரிப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தை அமல் படுத்தியது. இந்த திட்டத்தில் ஏழை குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தன் 5 கிலோ கோதுமை/ 5 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த செப்டம்பரில் இந்த திட்டம் முடிவடைய இருந்தது, ஆனால் டிசம்பர் 331ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு நீடித்தது. இந்த ஒரு சூழ்நிலையில் தற்பொழுது மோடி தலைமையிலான அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பு அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்தை நீடிப்பதாக அறிவித்து இருக்கிறார். இதில் கருத்துக்கள் இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்த ஆண்டு டிசம்பர் வரை நீடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நீடிப்பு முடிவடைந்து இன்று முதல் புதிய நீடிப்பு அமலுக்கு வருகிறது.


இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோக அமைச்ச அதிகாரிகள் கூறுகையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்கள் தகுதியான பயனாளர்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் கிடைக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.


ஜனவரி 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை இந்து திட்டம் அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் இவற்றை சரியாக நடைபெறுகிறதா? என்பதை சரி பார்க்க 18 நோட்டல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 81.35 கோடி மக்கள் பயனடைவார்கள். இதற்காக மத்திய அரசு சுமார் 2 லட்சம் கோடி செலவிலும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News