G20 மாநாட்டில் இடம்பெறும் நடராஜர் சிலை.. அதுவும் தமிழகத்தில் செய்ததா?

Update: 2023-09-02 02:35 GMT
G20 மாநாட்டில் இடம்பெறும் நடராஜர் சிலை.. அதுவும் தமிழகத்தில் செய்ததா?

G20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று இருக்கிறது. இந்த நிலையில் G20 மாநாடு மத்திய டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9, 10 ஆகிய இரண்டு நாட்களில் இந்த ஒரு மாநாடு நடைபெறுகிறது. இந்திய மாநாட்டில் இடம்பெறும் வகையில், உலகின் மிகப்பாரிய நடராஜர் சிலை, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய கலைக்கான மையத்தால் நிறுவப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் ஏற்கனவே மத்திய அமைச்சகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


இதில் என்ன சிறப்பு அம்சம் இருக்கிறது என்றால், இந்த சிலை தமிழ்நாட்டில் செய்தது. தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் மாவட்டம் சுவாமிமலையில் தேவ சேனாபதி சிற்பக்கலை அகாடமியில் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை தயாரிக்கப்பட்டது. மேலும் உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை உருவாக்குவதற்காக ஊழியர்கள் கடந்த ஆறு மாதங்களாக கடினமாக உழைத்து இருக்கிறார்கள். மத்திய அரசின் கீழ் உள்ள கலாச்சாரத் துறையால் கட்டப்பட்ட இந்த சிலை சோழர் பாணியில் வடிவமைக்கப் பட்டுள்ளது.


தற்போது, ​​75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதால், இந்திரா காந்தி தேசிய கலை மைய பேராசிரியர் அச்சல் பாண்டியா தலைமையிலான குழுவினர், மைய அதிகாரிகள் ஜவஹர் பிரசாத், மனோகன் தீட்சத் ஆகியோர், சுவாமிமலையில் இருந்து சாலை மார்க்கமாக டில்லிக்கு கொண்டு சென்றனர். இந்த சிலை தற்போது டெல்லியை அடைந்து இருக்கிறது சிலை செய்வதற்கான மீதம் உள்ள 25 பணிகளை செய்வதற்கு ஊழியர்கள் அங்கு சென்று இருக்கிறார்கள். இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் மற்றும் பல முக்கிய வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பார்கள், நிச்சயம் அவர்களுக்கு தமிழகத்தின் பெருமை புரியும் என்பதும் மத்திய அரசின் ஒன்றான நோக்கம்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News