G20 உச்சி மாநாடு.. பாரத் மண்டபத்தில் கலைக்கட்டும் பழங்குடியினரின் கைவண்ணம்..
பாரத் மண்டபத்தில் கைவினைப் பொருட்கள் சந்தையில் உள்ள ட்ரைப்ஸ் இந்தியா அரங்கில் G20 தலைவர்களின் உச்சி மாநாட்டிற்காக பழங்குடியினரின் பல்வேறு கலை மற்றும் கலைப்பொருட்களை காட்சிப்படுத்துகிறது. குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச பழங்குடியினரால் போற்றப்படும் பித்தோரா கலையின் செயல்விளக்கம் இடம்பெறுகிறது. பழங்குடியினர் நல அமைச்சகத்தின் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனம் (டிரைஃபெட்) 'ட்ரைப்ஸ் இந்தியா' அரங்கில் பாரம்பரிய பழங்குடியினரின் கலைகள், கலைப்பொருட்கள், ஓவியங்கள், மண்பாண்டங்கள், ஆடைகள், இயற்கை பொருட்கள் மற்றும் பொன்றவற்றை காட்சிப்படுத்துகிறது.
இன்று செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தக் கண்காட்சி கைவினைப்பொருட்கள் சந்தையில் காட்சிப்படுத்தப்படுகிறது. பத்மஸ்ரீ விருது பெற்றவரும், பித்தோரா கலையின் புகழ்பெற்ற கலைஞருமான ஸ்ரீ பரேஷ் ரத்வா கலந்து கொண்டு, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ரத்வா, பிலாலா, நாயக் மற்றும் பில் பழங்குடியினர் போற்றும் சடங்கு கலையின் செழுமை மற்றும் சடங்கு கலையின் நேரடி செயல்விளக்கத்தை வழங்குவார். தொன்மையான கலையின் மீதான ஆர்வமிக்க அணுகுமுறை நமது கலாச்சார செழுமைக்கு புத்துயிர் அளித்தது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கோண்டு ஓவியமும், ஒடிசாவைச் சேர்ந்த கைவினைஞர்களின் சவுரா ஓவியமும் கண்ணைக் கவரும் வண்ணம் காட்சியளிக்கின்றன. லே-லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் உயரமான பகுதிகளில் இருந்து அங்கோரா மற்றும் பஷ்மினா சால்வைகளைத் தவிர, போத் மற்றும் பூட்டியா பழங்குடியினரால் நெய்யப்பட்டவை தவறவிடக்கூடாத பொருட்களாகும். நாகாலாந்தின் கொன்யாக் பழங்குடியினரின் வண்ணமயமான நகைகள் காண்போரை ஈர்க்கின்றன.
Input & Image courtesy: News