G20 மாநாடு: உலக நாடுகள் மத்தியில் உயரும் இந்தியாவின் மதிப்பு!

Update: 2023-09-11 12:33 GMT

G20 மாநாடு நேற்று கோலாகலமாக இந்தியாவில் தொடங்கியது. இதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு வருகை தந்து இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து அரசாங்கத்தின் சார்பில் பலமான உபசரிப்புகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்தியா தற்பொழுது ஜி-20 நாட்டின் தலைமை பொறுப்பை வகித்து வரும் இந்த ஒரு சூழ்நிலையில் ஜி20யின் பதினெட்டாவது உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கி இருக்கிறது. இந்திய தலைமை தாங்கி நடத்தி வரும் இந்த மாநாட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.


டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் நடந்து வரும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். பல்வேறு நாட்டு உள்ளக தலைவர்களும் இந்தியாவிற்கு வருகை தந்து இருப்பதன் காரணமாக உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்பி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட நகரங்களில் 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு தற்போது மக்கள் ஜி20-யாக இது ஒரு நிகழ்வாக மாறி இருக்கிறது. தலைமைத்துவம் இந்தியாவிற்கு உள்ளேயும், வெளியையும் அடையாளமாக மாறி இருக்கிறது. உலகம் நன்மைக்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது.


இந்த மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள 2500 ஆண்டுகள் கால பழமையான தோனி மனித குலத்தின் நலன் மற்றும் மகிழ்ச்சி எப்பொழுதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரக்ருதி மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது. ஜி-20 தலைவர் என்ற முறையில் இந்த உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறையை அளவற்ற நம்பிக்கையாக மாற்றுமாறு முழு உலகையும் இந்தியா தற்போது அழைத்து இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News