G20 மாநாடு பிரதமர் பங்கேற்பு: தலைமை பொறுப்பேற்க தயாராகும் இந்தியா!

G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தோனேசிய பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

Update: 2022-11-15 11:19 GMT

இந்தியா உட்பட 19 நாடுகள் பங்கேற்கும் ஜி-20 என்ற அமைப்பு இருந்து வருகிறது. இந்த G20 அமைப்பில் இந்தியாவுடன் ஆன அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் இடம் பெற்று இருக்கிறது. இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ளது. இந்த தலைமை பொறுப்பு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் கைகளுக்கு வருகிறது. அதுவும் இந்தியா தனது சுதந்திர தின நாள் அமுதவிழாவை கொண்டாடிய தருணத்தில் இந்த பொறுப்பு கிடைப்பது மிக பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


அதன் சின்னம், கருப்பொருள் ஆகியவை இணையதளத்தில் வழியாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜி-20 அமைப்பின் இரண்டாவது நாள் உச்ச மாநாடு இந்தோனேசியாவில் பாலிதீவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான ஜலன் லூசா துவாவில் தொடங்குகிறது.


இந்த மாநாட்டில் உலக தலைவராக விளங்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கலந்து கொண்டு இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று இந்தோனேசியாவில் பாலிதீனுக்கு தனி விமானத்தில் புறப்பட்ட செல்கிறார். அவருடன் உயர் அதிகாரி குழுவினரும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது உலக நாடுகளில் இடம்பெற்றுள்ள, பல்வேறு அமைப்புகளில் ஜி20 அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News