ஜவுளித்துறை ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் இலக்கு - பியூஸ் கோயலின் அசத்தல் திட்டம்
ஜவுளி துறை ஏற்றுமதியை 100 பில்லியன் டாலருக்கு அதிகரிப்பதை இலக்கு என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை.
வரும் 2030ம் ஆண்டில் நாட்டின் ஜவுளித்துறை ஏற்றுமதி 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக செய்திகள் தற்போது வெளியாக இருக்கிறது. இது குறித்து விரிவான செய்திகளை தொடர்ந்து மத்திய அமைச்சர் வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக உலக அளவில் சந்தை தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஜவுளி துறையின் ஏற்றுமதி அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து மத்திய ஜவுளி துறை இணை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஜவுளி துறையில் ஏற்றுமதி குறித்து தகவல் ஜவுளி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி 2017ல் 37.5 அமெரிக்க டாலர் பில்லியன் டாலராகவும், 2023ல் 21.15 டாலராகவும் இருந்திருக்கிறது என்று மக்களவையில் பதிலளிக்கப்பட்டது.
தற்பொழுது பியூஸ் கோயில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் வரும் 2030ம் ஆண்டில் ஜவுளித்துறை ஏற்றுமதியை 100 பில்லியன் அமெரிக்க டாலரை இலக்கை அடைவோம் என்று நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar