மும்பையில் மீண்டும் பொதுமுடக்கம் வரும்: பொதுமக்களை எச்சரிக்கும் மாநகராட்சி மேயர்.!

மும்பையில் மீண்டும் பொதுமுடக்கம் வரும்: பொதுமக்களை எச்சரிக்கும் மாநகராட்சி மேயர்.!

Update: 2021-02-17 16:08 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வகையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து அனைத்து மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் வேகமாக குறைந்து வரும் வேளையில் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகரிக்கவே செய்கிறது. இதற்கு காரணம் பொதுமக்கள் அனைவரும் அரசு கூறிய அறிவுரைகளை கடைப்பிடிக்காமல் இருப்பதே என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருக்கும் காரணத்தினால் மும்பையில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் மும்பையில் பொதுமுடக்கம் போடப்படும் என்று மேயர் கிஷோரி பெட்னேகர் எச்சரித்துள்ளார்.

அரசு கூறிய வழிமுறைகளான மாஸ்க், மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது போன்றவை இடம் பெற்றிருந்தது. ஆனால் அதனை யாரும் முறையாக கடைப்பிடிப்பது இல்லை என்று மும்பை மேயர் குற்றம்சாட்டி வருகிறார்.
 

Similar News