அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட், டிசைன் காலணிகள் அணியக்கூடாது.. அரசு அதிரடி உத்தரவு.!

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட், டிசைன் காலணிகள் அணியக்கூடாது.. அரசு அதிரடி உத்தரவு.!

Update: 2020-12-12 08:19 GMT

அரசு ஊழியர்கள் வேலை நாட்களில் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா அரசு சுற்றரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது: அரசு ஊழியர்களின் புதிய ஆடை விதிப்படி, அலுவலகத்திற்கு மிகவும் மோசமான செருப்புகளை அணிந்து வரக்கூடாது.

மிகவும் கண்ணியமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வெள்ளிகிழமை கதர் ஆடை அணிய வேண்டும். ஆடைகள் விஷயத்தில், அரசு ஊழியர்கள் பற்றிய பிம்பம் மக்கள் மத்தியில் மோசமானதாக உள்ளது.

எனவே அரசு ஊழியர்கள் பணியின் போது சுத்தமான, சரியான உடைகளை அணிந்து கொண்டு வரவேண்டும். பெண் ஊழியர்கள் புடவைகள், சல்வார், சுடிதார், குர்தா, பேண்ட் - சட்டைகளை துப்பாட்டாக்களுடன் அணிந்து கொள்ளலாம். ஆண்கள் சட்டை - பேண்ட் அணிந்து கொள்ளலாம். டிசைன் டிசைனான உடைகள், எம்ப்ராய்டரி படங்கள், ஜீன்ஸ், டீ-ஷர்ட்டுகளை கட்டாயமாக அணியக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News