இனி இது தான் எதிர்காலத்தை ஆளப்போகிறது - 7.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மத்திய அரசின் திட்டம்!

Government has approved Production Linked Incentive (PLI) Scheme for Auto Industry and Drone Industry to enhance India's manufacturing capabilities

Update: 2021-09-17 02:30 GMT

தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வாகனத் துறை மற்றும் ஆளில்லா குறு விமானம் (ட்ரோன்) துறைக்கு ரூ. 26,058 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனுமதி அளித்துள்ளது.

வாகன துறைக்கான இந்தத் திட்டம், உயர் மதிப்பு கொண்ட மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கும். உயர் தொழில்நுட்பம், மேலும் திறமையான மற்றும் பசுமை வாகன உற்பத்தியில் ஒரு புது யுகத்திற்கு இந்தத் திட்டம் வழிவகுக்கும்.

13 துறைகளுக்கு அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ.37.5 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்றும், 5 ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள மேம்பட்ட வாகன தொழில்நுட்பத் தயாரிப்புகளின் உற்பத்திக்கான கட்டண குறைபாடுகளை எதிர்கொள்ள வாகன துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் உறுதுணையாக இருக்கும். இந்தத் திட்டத்தின் ஊக்குவிப்பு கட்டமைப்பு, மேம்பட்ட வாகன தொழில்நுட்பத் தயாரிப்புகளின் உள்நாட்டு உலகளாவிய விநியோக சங்கிலிக்கு புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் தொழில் துறையை ஊக்குவிக்கும்.

ஐந்து ஆண்டுகளில் வாகன துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் புதிதாக சுமார் ரூ. 42,500 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளும், ரூ. 2.3 லட்சம் கோடி அளவில் உற்பத்தியும், கூடுதலாக சுமார் 7.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News