லவ் ஜிகாத் மற்றும் மாடுகள் படுகொலைக்கு எதிரான சட்டத்தை அடிமைப்படுத்தவுள்ள கர்நாடக அரசு.!

லவ் ஜிகாத் மற்றும் மாடுகள் படுகொலைக்கு எதிரான சட்டத்தை அடிமைப்படுத்தவுள்ள கர்நாடக அரசு.!

Update: 2020-12-05 12:31 GMT

பல மாநிலங்களும் 'லவ் ஜிகாத்' குற்றங்களுக்கு எதிராகவும் மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராகவும் புதிய சட்டங்களைக் கொண்டுவந்துள்ள நிலையில், தற்போது கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க அரசும் புதிய மசோதாவைக் கொண்டுவர உள்ளது. "லவ் ஜிகாத்" மற்றும் மாடுகள் படுகொலை செய்வதற்கு எதிரான மசோதாக்களைக் கொண்டுவரும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகின்றது என்று கர்நாடக துணை முதலமைச்சர் Dr CN அஸ்வந்நாராயண் தெரிவித்தார். 

"பல மாநிலங்கள் ஏற்கனவே சட்டங்களை அமல்படுத்தியது. நாங்களும் 'லவ் ஜிஹாதுக்கு' எதிரான மசோதாவையும் மற்றும் மாடுகள் படுகொலை செய்வதைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டுவரும் ஏற்பாட்டில் இருக்கின்றோம்," என்று அஸ்வந்த்நாராயண் தெரிவித்தார். 

அக்டோபர் மாதம் பல்லப்கரில் கல்லூரி முன்பு வைத்து 22 வயதுடைய கல்லூரி மாணவியைச் சுட்டுக் கொன்ற வழக்கிற்குப் பிறகு கடந்த சில வாரங்களாக "லவ் ஜிகாத்" பிரச்சனை பெருமளவில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். 

சமீபத்தில், திருமணத்திற்காகக் கட்டாய மதமாற்றம் செய்வதை எதிர்த்து 2020 சட்டவிரோத மதமாற்றச் சட்டத்தை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அறிவித்தார். இது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்தபின்பு, "லவ் ஜிகாத்" தொடர்புடைய குற்றங்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க உத்தரவிட்டது. இதற்கிடையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "கட்டாய மதமாற்றக் குற்றத்தை" கட்டுப்படுத்த சட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

அதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் பா.ஜ.க அரசாங்கமும் வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மாடுகள் படுகொலை செய்வதற்கு எதிரான மசோதாவை அமல்படுத்த உள்ளது. முன்னர் பெங்களூருவில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Similar News