ஒரு அமைச்சருக்கு 20 பி.ஏ. எதுக்கு! கேரள அரசை லெப்ட், ரைட் வாங்கும் ஆளுநர்!
கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக பினராய் விஜயன் இருந்து வருகிறார். அங்கு ஆரிப் முகமது கான் ஆளுநராக பணியாற்றி வருகிறார். ஆளும் அரசு செய்கின்ற தவரை ஆளுநர் சுட்டிக்காட்டுவதில் தயங்குவதில்லை. இதனால் பினராய் விஜயன் அரசுக்கும், ஆளுநருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஆளுநருக்கு சமீபத்தில் தனி உதவியாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர். இது பற்றி ஆளுநர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளாவில் இருக்கும் அமைச்சர்கள் பலருக்கு 20க்கும் அதிகமான உதவியாளர்கள் இருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்கள் மாற்றப்படுகின்றனர். அவர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என்று அரசின் பணம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இது அரசுக்கு நிதி சுமையை ஏற்படுத்துகிறது.
மேலும், மாநில மக்களுடைய பணத்தை தவறாக பயன்படுத்துவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அரசியல் அமைப்புக்கு உட்பட்டு மாநில அரசுகள் நடந்து கொள்ள வேண்டும். மேலும் ஆளுநர் மாளிகை யாரும் கட்டுப்படுத்துவதற்கு அரசுக்கு உரிமை இல்லை. நான் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் கூறினார்.
Source: Maalaimalar
Image Courtesy: India Today