உதய்ப்பூர் படுகொலை பற்றிய பதிவு - சமூக வலைதள கணக்குகள் விசாரணை வளையத்திற்குள் வருகிறதா?

Update: 2022-07-02 08:11 GMT

உதய்பூரில் நடந்த படுகொலையை பாராட்டியோ, நியாயப்படுத்தியோ பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆங்கிலத் தொலைக்காட்சி விவாதத்தின்போது முகமது நபி பற்றி சர்ச்சையான கருத்தை பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கூறியிருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் வரவேற்றும் ஒரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்தது. இதன் பின்னர் நுபுர் சர்மாவை பா.ஜ.க.வில் இருந்து தற்காலிகமாக அக்கட்சி மேலிடம் நீக்கியது.

இதனையடுத்து நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து பதிவு செய்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது டைலர் கன்னையா லால் என்பவரை இஸ்லாமிய கும்பல் வெட்டிக்கொன்றது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது வரையில் இரண்டு கொலையாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டைலர் படுகொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலையை சிலர் நியாயப்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், படுகொலையை பாராட்டியோ அல்லது நியாயப்படுத்தியோ பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News