டெல்லியில் உள்ள ராஜ பாதை பெயர் மாற்றம் - பின்னணியில் உள்ள காரணம் தெரியுமா?

டெல்லியில் உள்ள ராஜபாதையின் பெயர் தற்போது கடமை பாதை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-07 03:02 GMT

டெல்லியில் உள்ள ராஜ் பார்க் எனப்படும் ராஜபாதை வரலாற்று சிறப்புமிக்க குடியரசு தின அணிவகுப்பு அந்தப் பாதையில் தான் நடைபெறுவது வழக்கம். தற்போது ராஜபாதையை சீரமைப்பது, புதிய கட்டும் நாடாளுமன்ற கட்டுவது உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா பணிகள் மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ராஜபாதையின் பெயரை கடமை பாதை என்று பொருள் குறிக்கும் வகையில் கர்தவ்ய பாதை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.


கர்தவ்ய பாதை என்றால் தமிழில் கடமை பாதை என்று பொருள். இந்திய கேட்டில் உள்ள நேதாஜி சிலையில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை உள்ள ஒட்டுமொத்த சாலையையும் பகுதியையும் இனிமேல் கடமை பாதை என்று அழைக்கப்பட உள்ளது. இந்தப் பெயர் மாற்றம் செய்வதற்கான புதிய டெல்லி மாநகராட்சி மன்றத்தின் சிறப்பு கூட்டம் நாளை நடைபெறுகிறது இதில் பெயர் மாற்ற தீர்மானம் முன்வைக்கப் பட்டுள்ளன. செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை, பிரதமர் நரேந்திர மோடி தனது அரசாங்கத்தின் லட்சியமான சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட முழு நீள பாதையை திறந்து வைக்கிறார்.


புது தில்லி முனிசிபல் கவுன்சில் செப்டம்பர் 7 ஆம் தேதி ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இந்த பெயர் மாற்றம் தொடர்பான முன்மொழிவு முன் வைக்கப்படும். "இந்தியா கேட்டில் உள்ள நேதாஜி சிலை முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான சாலை மற்றும் பகுதி முழுவதும் கர்தவ்யபத் என்று அழைக்கப்படும்" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047 ஆம் ஆண்டுக்கு வழிவகுக்கும் 25 ஆண்டுகளில் அனைவரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணமாக இந்த பாதை தற்போது கடமை பாதை என்று அழைக்கப்பட உள்ளது.

Input & Image courtesy: Business Standard

Tags:    

Similar News