Android, iOSக்கு பதிலாக உள்நாட்டு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆலோசிக்கும் மத்திய அரசு!
iOS, Androidக்கு மாற்றாக, உள்நாட்டு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்குவதற்கு அரசு இப்போது ஆலோசித்து வருகிறது.
தகவல் தொழில்நுட்பத்தில் பெருமளவு ஆதிக்கத்தை செலுத்தி வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை தவிர, உள்நாட்டில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்குவதற்கு அரசு ஆலோசித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிளின் iOSக்கு மாற்றாக உள்நாட்டில் இயங்கும் இயங்குதளத்தை உருவாக்க தொழில்துறைக்கான சுற்றுச்சூழல் அமைப்பை எளிதாக்கும் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் இதுபற்றி தொடர்பான அறிவிப்பு ஒன்றையும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் மொபைல் போன்கள் இரண்டு இயக்க முறைமைகளால் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக, கூகிளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிளின் iOS ஆகியவை ஹார்டுவேர் சுற்றுச்சூழல் அமைப்பையும் இயக்குகின்றன என்று அமைச்சர் கூறினார். "உள்நாட்டில் மூன்றாவதாக எதுவும் இல்லை. எனவே, உள்நாட்டு தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் தற்போது, பல வழிகளில் புதிய கைபேசி இயக்க முறைமையை உருவாக்குவதற்கு MeitY மற்றும் இந்திய அரசாங்கத்தின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. அதற்கான கொள்கையை நாங்கள் பார்த்து வருகிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.
உள்நாட்டு இயக்க முறைமையை அதாவது இதை ஆங்கிலத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம்(OS) என்று குறிப்பிடுவார்கள். எனவே அவற்றை உருவாக்குவதற்கு ஸ்டார்ட்-அப் மற்றும் கல்விச் சூழல் அமைப்புகளுக்குள் உள்ள திறன்களை அரசாங்கம் தேடுகிறது என்றும் அமைச்சர் அவர்கள் கூறினார். இயக்க முறைமை(OS) என்பது கணினி மற்றும் மொபைல் சாதனத்தின் முக்கிய மென்பொருளாகும். இது OS இன் பயனுள்ள செயல்பாட்டிற்காக முழு வன்பொருள் மற்றும் மென்பொருள் அமைப்பிலும் திறமையாக வேலை செய்கிறது. ஏனெனில் அயல்நாட்டு OS இயக்கு முறைமையை நம்பி இருக்காமல் உள்நாட்டில் ஒரு இந்திய பிராண்ட் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் கொள்கைகள் முயற்சித்து வருவதாகவும் சந்திரசேகர் அவர்கள் கூறினார்.
Input & Image courtesy: Swarajya News