பட்டியலின மக்கள் மதமாற்றம் செய்ய குறி வைக்கப்படுகின்றனரா..? கிறிஸ்தவர்களே இல்லாத கிராமத்தில் சர்ச் கட்ட அனுமதித்த பஞ்சாயத்து!
GramPanchayat has given approval for Church construction in Kolipyak
தெலுங்கானா மாநில அரசு மதமாற்றங்களை மேற்கொள்ளும் அமைப்புகளை தொடர்ச்சியாக ஆதரிக்கிறது. கிறித்துவ சமூகத்தினருக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
மதபோதகர்களுக்கு மனை, வீடு கட்டுதல், கிறிஸ்தவ பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பயனடையும் 70 சதவீத கிறிஸ்தவ மத போதகர்கள் இந்து சாதிச் சான்றிதழை வைத்துள்ளனர். இதனால், கிறிஸ்தவர்களுக்கான திட்டங்களால் பயனடைவது மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு உரிமையானவற்றையும் அபகரித்துள்ளனர்.
சாதாரண குடிமக்கள் பெருமளவில் கிறிஸ்தவர்களாக மாற்றப்படுகின்றனர். பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் குறி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள கோலிப்யாக் பஞ்சாயத்தில், கிறிஸ்தவர்கள் இல்லாத ஊரில் தேவாலயம் கட்டுவதற்கு கிராம பஞ்சாயத்து ஒப்புதல் அளித்துள்ளது.
மக்கள் சிறப்பு கிராமசபை கூட்டத்தை நடத்தி, அறிவிப்பை வெளியிட்டு, ஒப்புதலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இப்போது, சர்ச் கட்டுமானத்தை நிறுத்த ஜிபி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் 20 சதவிகித மக்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எதிர்வரும் காலங்களில் மாதமற்றத்திற்கு குறி வைத்து இப்படி ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.