கால்நடை பராமரிப்பு குறித்து பிரம்மாண்டமான ஸ்டார்ட் அப்: தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்!
கால்நடை பராமரிப்பு, பால்வளம் குறித்த பிரம்மாண்டமான ஸ்டார்ட் அப் மாநாட்டை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சுதந்திரத்தின் அமிர்தகாலப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் சார்பில் கால்நடை, பால்வளம் போன்றவற்றில் தற்போது செயல்பாட்டில் உள்ள மற்றும் வளரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தேசிய பால்வள மேம்பாட்டுக் கழகம், ஸ்டார்ட்-அப் இந்தியா, சிஐஐ மற்றும் தெலங்கானா மாநிலத்தின் கால்நடைப் பராமரிப்புத் துறையோடு இணைந்து இன்று மிகப் பிரம்மாண்டமான மாநாடு ஹைதராபாத்தில் நடத்தியது.
இந்த மாநாட்டில் மத்திய மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகித்தார். இந்தத் துறையின் இணை அமைச்சர்களான டாக்டர் சஞ்சீவ்குமார் பல்யான், டாக்டர் எல். முருகன் மற்றும் தெலங்கானா மாநிலத்தின் கால்நடைப் பராமரிப்பு, மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் தபர்ஷோத்தம் ரூபாலா, வேளாண்துறையில் பல்லுயிர் பெருக்கம் மூலம் கால்நடைத் துறையில் அதிகளவில் பொது முதலீட்டை அதிகரிப்பதும், ஊரக வருவாயை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் வலியுறுத்தினார். இத்துறையின் வளர்ச்சிக்கு அனைத்து துறை சார்ந்தவர்களும் நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டும் வகையிலும் இந்தத் துறையைச் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமளிக்கவும் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை முனைப்போடு செயல்பட்டு வருகிறது என்றார்.
Input & Image courtesy: News