சிவலிங்கம் மீது பச்சைத் துணி..மசூதியான கோவில்- தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்.!

சிவலிங்கம் மீது பச்சைத் துணி..மசூதியான கோவில்- தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்.!

Update: 2020-12-18 06:45 GMT

ஆந்திராவில் கிறிஸ்தவ மிஷனரிகளின் அட்டகாசம் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில், மறு பக்கம் தெலங்கானாவில் வெட்ட வெளியில் இருக்கும் கோவிலை மசூதியாக மாற்றும் முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஆந்திராவில் கோவில்களை மிஷனரிகள் சேதப்படுத்துவதாகவும், ஆக்கிரமிப்பதாகவும் அடிக்கடி செய்திகள் வருவது வழக்கம். அண்மையில் கூட தொடர்ச்சியாக கோவில் தேர்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தெலுங்கு மொழி பேசும் இன்னொரு மாநிலமான தெலங்கானாவில் ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர ராவ் அரசு முஸ்லிம்களுக்கு என்று கணக்கில்லாமல் திட்டங்களை செயல்படுத்தி வந்த போலும் அங்கிருந்து இது போன்ற செய்திகள் அதிகம் வரவில்லை.

 

 

ஆனால் தற்போது வெட்ட வெளியில் இருக்கும் சிவலிங்கம் ஒன்றை பச்சை நிறத் துணியைப் போரத்தி மசூதியாக மாற்றும் முயற்சி நடந்த தகவல் வெளியாகி உள்ளது. யதாத்ரி மாவட்டத்தில் உள்ள துருக்கபள்ளி என்ற இடத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடகங்களில் இது பற்றிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

 

அதில் வெட்ட வெளியில் ஒரு சிறிய கோவிலும் சிவ லிங்கமும் அமைந்துள்ளன. அவற்றின் மீது பச்சை நிறத் துணிகள் போர்த்தப்பட்டு இருக்கின்றன. ஹிந்து யுவ வாஹினி அமைப்பின் புகாரின் பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ தான் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

வனப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில் லிங்கத்தின் மீது துணிகளைப் போட்டு அது 'ஷாலி பாபா' மசூதி என்று கூறி அந்த நிலப்பகுதியை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பிழைக்க வந்த இடத்தில் கோவிலை மசூதியாக்கிய முஸ்லிம்களின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News