வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் பெருகும் ஆதரவு.. ஆய்வில் தகவல்.!

வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் பெருகும் ஆதரவு.. ஆய்வில் தகவல்.!

Update: 2020-12-22 15:39 GMT

விவசாயிகள் வருவாயை இரண்டு மடங்கு உயர்த்த வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு, பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் பற்றி தனியார் செய்தி சேனல் நிறுவனம், 22 மாநிலங்களில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களால், விவசாயிகள் பயன் பெறுவர் என, 53.6 சதவீதம் பேரும், போராட்டம் கைவிடப்பட வேண்டும் என, 46.4 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.

பஞ்சாப் தவிர்த்து, இதர மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தில், அரசியல் நோக்கம் உள்ளதாக, 48.7 சதவீதத்தினரும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தக் கூடாது என, 52.69 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள வியாபாரிகளை, விவசாயிகள் போர்வையில் போராட வைத்துள்ளனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளது.

Similar News