உலக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற BHU பல்கலைக்கழக மாணவியின் ஓவியம்.!

உலக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற BHU பல்கலைக்கழக மாணவியின் ஓவியம்.!

Update: 2020-12-21 17:32 GMT

நம் நாட்டிற்கு உள்ளேயே அதிக திறமைசாலிகள் இருப்பது அவ்வப்போது நிரூபிக்கப்பட்ட வருகின்றது. கடந்த மாதம் மீரட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் வடிவமைத்த வைர மோதிரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பெற்றது. அதே போன்று கடந்த வாரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒரு மணி நேரத்திற்குள் 46 விதமான உணவுகளைச் சமைத்து அனைவரையும் அசத்தினார். இவ்வாறு நம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து பல திறமைகள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கின்றது. 

அதேபோன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை(BHU) சேர்ந்த இளம் வயது மாணவி நேஹா சிங், உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தும் மசாலாக்கல் மற்றும் இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ரசாயனங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஓவியம் என்ற பட்டம் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 

நேஹா சிங் BHU பல்கலைக்கழகத்தில் வேத அறிவியல் பயின்றுவரும் மாணவியாவார். மேலும் இவர் அதே பல்கலைக்கழகத்தில் நுண்கலையும் பயின்றுள்ளார். இவர் உத்தரப் பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் கோத்துவாரி பகுதியில் இருந்து வருகிறார். இவர் வரைந்த ஓவியம் 62.72 sq m கொண்டுள்ளது. இவர் கின்னஸ் சாதனையை நவம்பர் 18 2020 இல் செய்தார். "இவர் வீணாகும் பொருட்கள் கொண்டு ஏத்தாது சிறப்பாக ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்டார்," என்பது கின்னஸ் உலக சாதனை அதிகாரப் பூர்வ வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. 

இவரது சாதனையைப் பாராட்டும் விதமாகப் பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேட் ஒரு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். "அந்த விழாவில் இவரது சாதனையைப் பாராட்டி மற்றும் இவர் வரைந்த ஓவியமான பாதுகாக்கும் மரம்(tree of salvation) குறித்துத் தெரிவித்தார்."

இதன் ஒரு ஆசிரியமாக, இதற்கு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் மிகப்பெரிய மசாலா பொருள் கொண்ட ஓவியமும் இந்திய நபரால் படைக்கப்பட்டது. அவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா டத்தினினி 588.56  சதுர அடி கொண்ட ஓவியத்தை உருவாக்கினார். 

Similar News